2025 மே 02, வெள்ளிக்கிழமை

31 அன்று இ.தொ.கா வருமா?

Gavitha   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை, இம்மாத இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், 31ஆம் திகதி நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் உள்ளிட்ட அக்கட்சியின் நிதி காரியதரிசியும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிருமான மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோருடன் மேலும் பலர், சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட இவர்களுக்கு இதுவரை பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, மாவட்ட சுகாதார திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.

பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டாலும் இதற்கான அறிக்கை வெளியாகும் வரை, இவர்கள் சுயதனிமையில் இருப்பர் என்றும் இந்நிலையில் 31ஆம் திகதி நடைபெறவுள்ள சம்பளப் பேச்சுவார்த்தையில் இ.தொ.கா தரப்பிலுள்ள முக்கியஸ்தர்களில் பெரும்பாலானோர் கலந்துகொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X