Kogilavani / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
ஊவா பரணகமமையில் 42 நாள்களேயான சிசுவுக்கும் சிசுவின் தாய்க்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
பதுளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே, மேற்படி இருவருக்கும் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றாளருடன் தொடர்பைப் பேணியதால் மேற்படி பெண் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, குறித்த பெண்ணுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி இருவரும் பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதுடன் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026