Freelancer / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா,மொக்கா தோட்ட கீழ் பிரிவில், ஞாயிற்றுக்கிழமை (09) காலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதலில், தோட்டக் குடியிருப்பு வீடொன்றில் இருந்து 45 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
45 லீற்றர் கசிப்பும் இரண்டு கேன்களில் அடைக்கப்பட்டிருந்தன. இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு கிடைத்த தகவலை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து கருவாடு கொண்டு வந்த பார ஊர்தி மூலம் கசிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
செ.தி.பெருமாள்
53 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
15 Jan 2026