ஆ.ரமேஸ் / 2020 மே 05 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் -19 நிவாரணமாக, 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த நிவாரண நடவடிக்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிப்படுவதை, வன்மையாகக் கண்டிப்பதாக, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடுன், இந்த குழறுபடிகள் கலையப்பட்டு, அனைவருக்கும் இந்தக் கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெத்திலிங்கம் மகேந்திரன் இன்று (05) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இந்த 5,000 ரூபாய் கொடுப்பனவில், ஆரம்பத்தில் இருந்தே பல குழறுபடிகள் காணப்படுவதாகவும் இதில், முறையாக ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளுக்கு நாள் சுற்றுநிறுபங்கள் மாற்றம் செய்யப்படுவதாகவும்
சுற்று நிரூபம் தொடர்பான தெளிவூட்டல்கள் உரிய தரப்பினருக்கு முறையாக வழங்குவதற்கு, அதிகாரிகள் தவறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், இந்தக் கொடுப்பனவு வழங்குவதில் அசாதாரணமும் முறைக்குடுகளும் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில், அரசாங்கம் விரைவில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago