Ilango Bharathy / 2021 ஜூலை 05 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை மாவட்டத்தில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மாத்திரம் 5,939 பலா மரங்கள்
வெட்டப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களுக்கு அமைய, 2019ஆம்
ஆண்டு 3,346 பலாமரங்களும் கடந்தாண்டு 2,593 மரங்களும் வெட்டப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2019ஆம் ஆண்டு உக்குவளை பிரதேச செயலகப் பிரிவில் 755 பலா மரங்களும்,
இரத்தோட்டை பிரதேச செயலகப் பிரிவில் 652 பலா மரங்களும்,யட்டவத்த பிரதேச செயலகப்
பிரிவில் 316 பலா மரங்களும்,பல்லேபொல பிரதேச செயலகப் பிரிவில் 253 பலா மரங்களும்,
கலேவல பிரதேச செயலகப் பிரிவில் 183 பலா மரங்களும், தம்புள்ளை பிரதேச செயலகப் பிரிவில் 18 பலா மரங்களும் வெட்டப்பட்டுள்ளன.
அதிகமாக மாத்தளை செயலகப் பிரிவிலேயே பலா மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்கமுவ பிரதேச செலயகப் பிரிவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான 12 மரங்களே வெட்டப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்தாண்டு மாத்தளை செயலகப் பிரிவிலேயே அதிக பலா மரங்கள்
வெட்டப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய, 592 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதுடன்,
மிகக் குறைந்த எண்ணிக்கையாக லக்கல பிரதேச செயலகப் பிரிவில் 7 பலா மரங்களே
வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
2 hours ago