2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

50 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 28 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சதீஸ், மு.இராமச்சந்திரன் 

பொகவந்தலாவை - செல்வகந்த தோட்டப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, இன்று (28) அதிகாலை 5.30 மணியவில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 மதுபான போதல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர் .

பொகவந்தலாவை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவலைப்பின் போதே, குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு, மதுபான சலைகள் மூடப்படும் நாட்களில் விற்பனை செய்வதற்காகவே குறித்த விட்டில் இந்த மதுபான போத்தல்கல் மறைத்து வைக்கபட்டிருந்ததாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது .

குறித்த சந்தேக நபருக்கு பொகவந்தலாவ பொலிஸாரால் பிணை வழங்கப்பட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு, பொகவந்தலாவை பொலிஸாரால் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X