Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, இன்று (03) காலை வரை, 506ஆக அதிகரித்துள்ளது என, மத்திய மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், கண்டி மாவட்டத்தில் இருந்து 294 தொற்றாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 160 தொற்றாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 52 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி மாவட்டத்தில் அதிக தொற்றாளர்கள் அக்குறணையில் 78 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இதுவே கண்டி மாவட்டத்தில் அதிகளாவான தொற்றாளர்கள் பதிவான சுகாதார பிரிவு என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் அதிக தொற்றாளர்கள் அம்பமுவ பிரதேச செயலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் இத்தொகை 57 ஆக பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதவேளை, இன்று (03) காலை வரையான 24 மணித்தியாலத்துக்குள் மத்திய மாகாணத்தில் 26 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இதில் 14 பேர் நுவரெலியா மாவட்டத்தில் இருந்தும் 12 தொற்றாளர்கள் கண்டி மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையங்களுக்கு, கடந்த 24 மணித்தியாலங்களில் 38 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 20 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
2 hours ago