Janu / 2024 ஏப்ரல் 07 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்ட விரோதமான முறையில் போதை குளிசைகள் எடுத்துச்சென்ற குற்றச்சாட்டில், இருவர் சனிக்கிழமை (06) கைது செய்யப்பட்டதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மொனராகலையில் இருந்து பிபிலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பட்டா ரக வாகனமொன்றை , மாவட்ட செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சோதனையிட்ட போது சட்டவிரோதமாக எடுத்துச்சென்ற 500 போதை குளிசைகள் மீட்கப்பட்டுள்ளது .
இது தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் கம்பளை , கம்பளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 26 மற்றும் 36 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் , சந்தேக நபர்களையும் , மீட்கப்பட்ட போதை குளிசைகள் மற்றும் பட்டா ரக வாகனத்தையும் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .


8 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025