Freelancer / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள், நுவரெலியா மாநகரசபை சுகாதார பிரிவு காரியாலயத்தில் நேற்று (07) முதல் வழங்கப்படுவதாக நுவரெலியா மாநகரசபையின் பொது சுகாதார அதிகாரி ஆர்.எம். பீ. எஸ். தெல்பிட்டிய தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட 9 வட்டாரங்களில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று முதல் கொரோனா தொற்று தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்ககப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக 4 வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஏனைய வட்டாரங்களில் உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும்.
மாநகரசபை எல்லைக்குள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கிய பின்னர் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஆரப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நுவரெலியா பொது வைத்தியசாலையிலும் கடந்த வியாழக்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் தொடர்ந்து வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
19 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
19 Jan 2026