R.Maheshwary / 2022 ஜூன் 12 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
லுணுகலை -ஹொப்டன் பகுதியில் 60 லீற்றர் டீசலை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், 33 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி CI சாமிந்த தலைமையிலான குழுவினர் டீசல் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகப்படும் இடத்தில் தேடுதலை மேற்கொண்ட போது, டீசல் நிரப்பப்பட்ட மூன்று கேன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் பிணையில் விடுவித்ததோடு, பசறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago