2025 மே 15, வியாழக்கிழமை

7 நாளுக்கு முன்னரே கைதி மாயம்

Freelancer   / 2023 மார்ச் 23 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

ஹெரோய்ன் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவர், ஆறுமாத சிறைத்தண்டனையின் கீழ் புனர்வாழ்வளிப்பதற்காக, பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

அந்த கைதி, செவ்வாய்க்கிழமை (21) தப்பியோடிவிட்டார் என பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர். அவர், இம்மாதம் 28ஆம் திகதியன்று விடுதலை செய்யப்பட இருந்தவர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வத்தளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 31 வயதான நபரே தப்பியோடிவிட்டார். திறந்தவெளி சிறைச்சாலையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார் என்று தெரிவித்த பல்லேகல பொலிஸார், அவரை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .