R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
மலையக ரயில் சேவைகளான உடரட்ட மெனிகே மற்றும் பொடி மெனிகே ஆகிய இரு ரயில்களும் 8 நாட்களின் பின்னர் இன்று ஹட்டனில் சந்தித்துக்கொண்டன.
மலையகத்துக்கான ரயில் வீதியான கொழும்பு- பதுளை ரயில் மார்க்கத்தில் நாவலப்பிட்டி தொடக்கம் நானுஓயா வரையான பகுதிகளில் 15 இடங்களில் கடந்த வாரம் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிவால் மலையக்துக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இன்று மீண்டும் மலையகத்துக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பொடி மெனிகே ரயிலும் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலும் இன்று பகல் 12 மணிக்கு ஹட்டன் ரயில் நிலையத்தில் சந்தித்தன.

13 minute ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 Mar 2026