2021 ஜூன் 14, திங்கட்கிழமை

சுப்பர் மார்க்கெட் முற்றுகை: இருவர் கைது

Princiya Dixci   / 2017 மே 20 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, கொப்பரா சந்தியில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி, சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்கள் என்பவற்றை இறைவரி திணைக்கள அதிகாரிகள், நேற்றுக் (19) கைப்பற்றியதோடு, இருவரைக் கைதுசெய்துள்ளனர்.

கம்பஹா மாவட்ட உதவி இறைவரி திணைக்கள ஆணையாளர் ஆர்.எம். ரத்நாயக்கவுக்குக் கிடைத்த தகவலையடுத்து  தலைமையிலான கம்பஹா மற்றும் ஜா-எல இறைவரித் திணைக்கள   அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர் குழுவினர், இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது 268 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், 5,400 வெளிநாட்டு சிகரெட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.  

அத்துடன்,  குறித்த சுப்பர் மார்க்கெட்டின் உரிமையாளரும் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .