2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

மக்களுக்கு ஜனாதிபதி புகழாரம்

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷித குமார டி சில்வா

உலகில் எந்தவொரு நாட்டிலும் காணமுடியாத தியாகமும் மனிதாபிமானமும், இலங்கை மக்களிடையே காணப்படுவதற்கு பௌத்தக் கோட்பாட்டு பின்னணியிலான சமூக சூழலே காரணமாகுமென, ஜனாதிபதி தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது அன்பு, கருணை மற்றும் தியாகச்  சிந்தையுடன் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பக் கண்ணீருடன் இணைந்து அவர்களை ஆற்றுப்படுத்துவதற்காக அனைத்து மக்களும் ஓரணியில் திரண்டதற்கு பௌத்த தத்துவத்தின் அடிப்படையிலான உன்னத மனிதாபிமான பண்புகள் இலங்கை மக்களின் இதயங்களில் நிறைந்துள்ளமையே காரணமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பெந்தர விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புத்தபிரானின் திருவுருவ சிலையை, செவ்வாய்க்கிழமை பிற்பகல் திறந்து வைத்தல் மற்றும் வண. பெந்தர ஜினாநந்த தேரருக்கு சங்கநாயக்கர் பதவியை வழங்கும் நிகழ்வு ஆகியவற்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெந்தர நகருக்கு பெரும் ஆசிர்வாதத்தை தரும், உள்நாட்டு, வெளிநாட்டு மக்களை கவரக்கூடியவாறு பெந்தர நகரில் நிர்மாணிக்கப்பட்டள்ள புத்தபிரானின் திருவுருவ சிலையின் நினைவு பலகையை ஜனாதிபதி திரைநீக்கம் செய்து, வழிபாட்டுக்காக திறந்து வைத்தார்.

வண.பெந்தர ஜினாநந்த தேரரின் சமய, சமூக சேவைகளைப் பாராட்டி காலி கோரளையின் பிரதம சங்கநாயக்கர் பதவி வழங்கப்பட்டது. தேரருக்கான நினைவுப் பரிசு ஒன்றும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .