Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 09 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாரூக் தாஜூதீன்)
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான உதுல் பிரேமரத்னவுக்கு பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்தது.
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் 1,52,834 ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு மேற்படி ஏற்பாட்டாளர் சேதம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது உதுல் பிரேமரத்னவுக்கு பிணை வழங்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.யூசுப் மன்றில் தெரிவித்தார்.
உதுல் பிரேமரத்ன போன்ற 21 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி அவருக்கும் பிணை வழங்குமாறு கோரினார்.
இருப்பினும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான உதுல் பிரேமரத்னவுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றுக்கு இல்லை எனக் கூறி இவருக்கு பிணை வழங்க மறுத்தார்.
47 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago