2021 ஜூன் 24, வியாழக்கிழமை

எக்ஸ்போ பஸார் 2011 கண்காட்சி ஆரம்பம்

Super User   / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவில் ஏற்றுமதி அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஏற்றுமதி சந்தை 2011 (எக்ஸ்போ பஸார் 2011) கண்காட்சி மற்றும் விற்பனை கூடத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம இன்று  ஆரம்பித்து வைத்தார்.

இன்று முதல் மூன்று தினங்களுக்கு இந்த கண்காட்சி இடம் இடம்பெறவுள்ளது.

ஆரம்ப விழாவில் கலந்துகொண்ட கைத்தொழில், வணிக துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், பொருளாதார துறையில் இலங்கை புதிய பரிணாமத்தை நோக்கி நகர்வதாகவும் 2015 ஆண்டில் எமது இலக்கை அடைவதற்கான சூழல் தற்போது கணிந்துள்ளதாகவும் கூறினார்.

கடந்த காலாண்டு பகுதியில் உள்ளக பொருளாதார வளர்ச்சி  வீதம் 8.6 ஆக உயர்ந்துள்ளதாகவும்,அதே போன்று தனியார் துறையின் வளரர்ச்சியும் சமாந்தரமாக செல்வதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் றிசாத் பதியுதீன், 'கடந்த 6 வாரங்களாக இலங்கையின் புகழ் சர்வதேசத்தின் பார்வைக்கு சென்றதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். இது எமது இலங்கைக்கு புதிய உள்ளீடுகளை கொண்டுவருவதற்கான தளமாகவுள்ளது' என்றும் கூறினார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .