Editorial / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
போதைப் பொருள் விற்பனை செய்வோருக்கு, ஹெரோய்ன் போதைப் பொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை, நீர்கொழும்பு பிரதான நீதவான், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த அக்கா மற்றும் தம்பி ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்கா பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, சந்தேக நபர்கள், போதைப் பொருளை கொழும்பில் இருந்து பஸ்ஸில் கொண்டு வரும் போது கட்டுநாயக்க 18ஆம் கட்டை ரயில் கடவை அருகில் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, அக்காவிடமிருந்து 4 கிராம் 35 மில்லி கிராம் ஹெரோய்னும் தம்பியிடம் இருந்து 5 கிராம் 25 மில்லி கிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள், ஹீனஹிட்டியான மற்றும் மினுவாங்கொட பிரதேசங்களில் உள்ள போதைப் பொருள் விற்பனையாளர்களுக்குப் போதைப் பொருளை விநியோகித்து வந்துள்ளனர் எனவும் ஆண் சந்தேகநபர் ஹீனஹிட்டியான பிரதேசத்தில் வாடகைக்கு அறையொன்றை எடுத்து போதைப் பொருள் விநியோகித்து வந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025