2025 நவம்பர் 19, புதன்கிழமை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சீன நிறுவனமொன்று உதவி

Yuganthini   / 2017 ஜூன் 20 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் இடம்பெற்ற வெள்ள, மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, சீனாவின் ஜியோ பொறியியல் கூட்டுத்தாபனம் (CGC), 500,000 ரூபாயை வழங்கியுள்ளது. இந்த நிறுவனம், 1995ஆம் ஆண்டிலிருந்து, நீர் வழங்கல், வெள்ளக் கட்டுப்படுத்தல், கழிவுநீர் முகாமைத்துவம் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனம், கடந்த ஓராண்டு காலப்பகுதிக்குள், இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கும் 2ஆவது சந்தர்ப்பமாகும். ஏற்கெனவே, கடந்தாண்டு இடம்பெற்ற வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டோருக்கு, 200,000 ரூபாயை அன்பளிப்புச் செய்திருந்தது.

ஜியோ நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் ஷு டெஹுவா, இந்தக் கொடுப்பனவுக்கான காசோலையை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ். மியான்வலவிடம் கையளித்தார். இதன்போது, ஜியோ நிறுவனத்தில் அதிகாரிகளும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சீனாவின் பெய்ஜிங்கை மையமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஆசியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலுமாக, 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டுக் கிளைகளைக் கொண்ட, அரசால் உரிமைப்படுத்தப்பட்டுள்ள நிறுவனமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X