Niroshini / 2016 ஜூன் 27 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் 90ஆவது தலைவராக மீண்டும் வைத்தியர் அநுருத்த பாதினிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியர் அநுருத்த பாதினிய இப்பதவிக்கு தெரிவு செய்யப்படுவது இது 6ஆவது தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வைத்தியர் அநுருத்த பாதினிய குருநாகல் மலியதேவ பாடசாலையின் பழைய
மாணவரும் கொழும்பு மருத்துவ பீட பட்டதாரியும் கொழும்பு சீமாட்டி
ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நரம்பியல் வைத்தியநிபுணரும்
ஆவார்.
கடந்த வருடங்களில் தேர்தல்கள் மூலம் 95 சதவீதத்துக்கும் அதிகமான
வாக்குகளைப் பெற்று தெரிவாகிய இவர், இம்முறை ஏகமனதாக போட்டிகள் எதுவும் இன்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், செயலாளராக வைத்தியர் நவீன் டீ சொய்சா, உபதலைவர்களாக
விசேட வைத்திய நிபுணர்களான வைத்தியர் குடாகம மற்றும் வைத்தியர் தென்னகோன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழ் பேசும் வைத்தியர்களில் வைத்தியர் பாலகிருஷ்ணன் சாயி நிரஞ்சன் உபசெயலாளர்களில் ஒருவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
வைத்தியர் அழகையா லதாகரன், வைத்தியர் ரிஸ்வின், யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் தங்கராஜா காண்டீபன் ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
4 minute ago
10 minute ago
23 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
23 minute ago
27 minute ago