2025 நவம்பர் 19, புதன்கிழமை

ஆயுதங்களுடன் பாதாள உலக நபர் கைது

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 26 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலகக் கோஷ்டி தலைவர் ஒருவரை கொலை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களுடன், பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த நபரொருவரை, நீர்கொழும்பு பொலிஸார், இன்று (26) கைதுசெய்துள்ளனர்.  

கட்டுநாயக்க, கலஹு கொடவிட்ட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.   

இதில், ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டு, அவற்றுக்கான ரவைகள் 263, ரி-56 ரக துப்பாக்கியின் பகுதியொன்று, ரைபர் ரவைகள் 25 மற்றும் ரி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தும் மெகஸின் உட்பட மேலும் சில ஆயுதங்கள் அடங்குகின்றன.  

இது தொடர்பில், மினுவாங்கொட ஹீனஹிட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த ரத்தரன் ஹன்தி சுதேஸ் தேவந்த (30 வயது) என்பவரை கைதுசெய்த பொலிஸார், அவரிடம் விசாரணை செய்துள்ளனர்.  

இந்த ஆயுதங்கள், கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரான ‘பொடி சாகர’வை கொலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டது என தெரியவந்துள்ளது.   

இராணுவத்தில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவரிடமிருந்து, பல தடவைகள் கொண்டுவரப்பட்டு, சேமிக்கப்பட்டுள்ளன.   
தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேகநபரான இராணுவ வீரரைத் தேடும் பணியில் நீர்கொழும்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X