Gavitha / 2017 ஏப்ரல் 02 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
விகாரைக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத குழுவினர், அங்கிருந்த அனைத்து புத்தர் சிலைகளையும் உடைத்து சேதமாகிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக, அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அவிசாவளை - தீகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், விகாரையில் எந்த ஒரு பிக்குவும் இருக்கவில்லை எனவும் பிக்குகள் தங்கும் வகையில் விகாரையில் இடவசதிகள் இல்லை எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உடைத்து நொருக்கப்பட்டுள்ள சிலைகளுக்குள் மிக முக்கியமானதாக கருதப்படும் சிலை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026