Editorial / 2017 ஜூலை 11 , பி.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீ.எம். முக்தார்
“இனவாதத்துக்கு எதிராகப் பேசுங்கள் என, மாணவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று, சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
“ஆனால், இனவாதத்துக்கு இனவாதத்தால் பதிலளிக்க வேண்டாம் என்றும் நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல் வாழ்ந்து முன்னேற்றமடைவோம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும், அமைச்சர் தெரிவித்தார்.
பேருவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றியதாவது,
“முஸ்லிம் நாடுகளில், ஏனைய மதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதென, சிலர் கூறுகின்றனர். இந்தத் தவறான கூற்றை, சொற்ப கூட்டத்தினர் பரப்பி வருகின்றனர். அதேபோல், முஸ்லிம்கள் மத்தியிலும் இனவாதிகள் உள்ளனர்.
“நாம் சுதந்திரம் பெரும்போது, ஜப்பானுக்கு இரண்டாவதாகவே இலங்கை இருந்தது. இந்நாட்டின் தனிநபர் வருமானம், 1 டொலர் குறைவால் மட்டுமே இருந்தது. ஆனால் இன்று, மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் பின்னால் நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
“5 வருடங்களில், சிங்கப்பூரை ஸ்ரீ லங்காவாக மாற்றுவேன் என்று, அன்று தீ க்வான் யோ கூறினார். ஆனால், 1977ஆல் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்தன, 5 ஆண்டுகளில், இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று கூறினார்.
“இனங்களுக்கிடையே மோதல்களை ஏற்படுத்துவது ஒருசில அரசியல்வாதிகளே. அதற்கு மறைமுகமாக உதவி ஒத்தாசை வழங்குவது ஊடகங்கள். இவற்றின் காரணமாக கஷ்டப்படுவது ஏழை மக்களே ஆவர். இவ்வாறு மோதல்களை ஏற்படுத்தும் அனைவரையும் ஒரே கூட்டில் அடைக்க வேண்டும்.
“எல்லா மதங்களும் நல்ல மணிதர்களை உருவாக்கும் பணியிலேயே செயல்படுகிறது. புத்த பிரான், ‘இனம்’ என்று காரணம் காட்டியது மனிதர்களையே” என்றார்.
28 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
51 minute ago
54 minute ago