Niroshini / 2016 ஜூன் 26 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

மக்களுக்கு நம்பிக்கையுடன் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளித்து அதன் தரத்தைப் பரிசோதிப்பதற்கு உரிய வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கினார்.
நேற்று பிற்பகல் காலியில் தாபிக்கப்பட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களைப் பரிசோதிக்கும் ஆய்வுகூடத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அவர்கள் இவ் ஆலோசனையினை வழங்கினார்.
காலி மாவட்ட மக்கள் இரண்டு தசாப்பதங்களுக்கும் மேற்பட்ட காலமாக கோரியிருந்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கு இணங்க, இவ் ஆய்வுகூடம் காலியில் ஸ்தாபிக்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் இவ்வாறான ஆய்வுகூடங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் அரசாங்கத்தின் நம்பிக்கையை உறுதிசெய்யும் நோக்கில் இவ் ஆய்வுகூடங்கள் தாபிக்கப்படுகிறது.
இதன்போது, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதரவினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி ஆய்வுகூட நடவடிக்கைகளை பார்வையிட்டார்.
இந்கிகழ்வில், அமைச்சர்களான வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
4 minute ago
10 minute ago
23 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
23 minute ago
27 minute ago