Kogilavani / 2017 மார்ச் 28 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹக்மன - துடுவ சந்தி - சிறிய பாலத்துக்கு அருகில் வைத்து இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி ஒருவரை, இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை மாவட்ட தொழிலாளர் அலுவலக அதிகாரியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
திஹகொட வர்த்தகர் ஒருவர் தமது பணியாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியை ஒதுக்காத நிலையில், அந்த குற்றத்தை வழக்கு தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு குறித்த அதிகாரி ரூபாய் 60 ஆயிரம் பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளார்.
அதில் 30 ஆயிரத்தை பெற்று கொண்டிருந்த போதே குறித்த அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகரின் முறைப்பாட்டுக்கு அமையவே, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026