Princiya Dixci / 2016 நவம்பர் 03 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருதய நோயினால் பாதிக்கப்பட்டு, இந்தியாவிலேயே இரண்டு முறைகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பாணந்துறை, திந்திரமுல்ல திலக மாவத்தை, இல. 58, பொன்சேகா வீதியில் வசிக்கும் 09 வயதுச் சிறுமியான சலனி சொய்சா, மற்றுமொரு நோயினால் அவதிபடுகின்றாள்.
அவரது வலது கால் பாதம் 18.5 மில்லிமீற்றர் வரை தேய்ந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். அதற்கு மருத்துவம் செய்வதற்கும், இருதயத்தைப் பரிசோதனை செய்து பார்க்கவும் டிசெம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இந்தியாவுக்குச் செல்லவேண்டியுள்ளது.
இந்தியாவில் மருத்துவ செலவைச் செய்வதற்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் இந்திய ரூபாய் (இலங்கை ரூபாவில் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 10 ரூபாய்) தேவைபடுகின்றது. இத்தொகையை திரட்டிக்கொள்ள தன்னால் முடியாதுள்ளது என சிறுமியின் தந்தையான நாலக சொய்சா தெரிவித்துள்ளார்.
எனவே, பரோபகாரிகளிடமிருந்து அவர் நன்கொடையை எதிர்பார்த்துள்ளார். நன்கொடையை வழங்க விரும்புபவர்கள், பாணந்துறை இலங்கை வங்கியால் பராமரிக்கப்படும் கணக்கு இலக்கம்: 8124458 என்ற கணக்குக்கும் பாணந்துறை சம்பத் வங்கியால் பராமரிக்கப்படும் கணக்கு இலக்கம்: 102657129083 என்ற கணக்கு இலக்கத்துக்கும் நன்கொடைகளை வழங்கலாம். விவரங்களுக்கு 0714- 758595 என்ற அலைபேசி இலக்கத்தினூடாகச் சிறுமியின் தந்தைக்கு அழைக்கலாம்.

3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026