Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எஸ்.எம்.ஜாவித்
கொவிட் -19 நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அமல்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டம் காரணமாக மக்கள் அத்தியாவசியப் பொருள்களுக்குப் பாரிய அசௌகரியங்களை எதிர் கொண்டு வரும் இவ்வேளை யில் கிருளப்பனை பகுதியில் உள்ள மூவின மக்களுக்கும் வழங்குவதற்கு கிருளப்பனை அஸ்-மஸ்ஜிதுல் தக்வா ஜூம்ஆப் பள்ளிவாசல் சுமார் 1500 ரூபா பெறுமதியான 2000 உலர் உணவுப் பொதிகளை வழங்கியுள்ளது.
மேற்படிப் பொதிகளை உத்தியோக பூர்வமாக வழங்கும் நிகழ்வு பள்ளிவாசலின் தலைவர் ராஸிக் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிருளப்பனை ரத்னராமய விஹாரையின் விஹாராதிபதி ரத்னபால நசாக்கி தேரர், சித்தாத்த தேரர், கிருளப்பனை இந்து ஆலயத்தின் சிவசிறி குமார குருக்கல், கிருளப்பனை ஜீவதிய தேவஸ்தானத்தின் அருட் தந்தை நிசாந்த குரே, கிருளப்பனை பள்ளிவாசலின் மௌலவி அப்துல் ரஹ்மான், கிருளப்பனை பொலிஸ் பொறுப்பதிகாரி, கிருளப்பனை பிரிவு கிராம சேவக அதிகாரி, பள்ளிவாசலின் நிருவாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது முதற்கட்டமாக சிலருக்கு உலர் உணவுப் பொருட்களை சமயத் தலைவர்களும், அதிதிகளும் வழங்கி வைத்தனர். ஏனையவை உரியவர்களின் வீடுகளுக்கு பள்ளிவாசல் நிருவாகத்தினரால் நேரடியாகக் கொண்டு சென்று வழங்கப்படும் எனத் தலைவர் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago