Gavitha / 2016 ஜூன் 05 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்
ஊடகவியலாளர் பிரடி கமகே மீது, நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் வைத்து கடந்த வியாழக்கிழமை (02) மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கோரி, நேற்று சனிக்கிழமை (04) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டமும் கூட்டமும், நீர்கொழும்பு நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்றதோடு, அதற்கு முன்னர், சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களிலும் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்ணாந்து, மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்ணாந்து, மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.


7 minute ago
20 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
24 minute ago
31 minute ago