2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஊடகவியலாளர் மீதான தாக்குதல் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை

Princiya Dixci   / 2016 ஜூலை 13 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் வைத்து ஊடகவியலாளர் பிரடி கமகேயைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரையும், கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில், நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த, நேற்று செவ்வாய்க்கிழமை (12) விடுவித்தார்.

சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 50 ஆயிரம் ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்து நீதவான் உத்தரவிட்டார்.

நீர்கொழும்பு மாநகர சபையின் வாசிகசாலையில் சிற்றூழியராக பணியாற்றும் துசான் கிரிஸ்மால் பெர்ணான்டோ மற்றும் அவரது சகோதரரான சுபுன் ரங்கன பெர்ணான்டோ ஆகியோரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தையடுத்து ஊடகவியலாளர் பிரடி கமகேவினால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும், கடந்த ஐ{ன் மாதம் 04ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் சார்பில் பல தடைவைகள் பிணை கோரப்பட்ட போதும் நீதவானினால் பிணை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (12) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்கள் சார்பில் பிணை கோரிக்கை விடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரகோன் உட்பட ஏழு சட்டத்தரணிகள் ஆஜராயிருந்தனர்.

இரு தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களின் பின்னர் நீர்கொழும்பு பிரதான நீதவான் சந்தேகநபர்களைக் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டதுடன், மாதத்தின் கடைசித் தினத்தில் மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவுக்கு ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X