2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் நிலையம் மீது தாக்குதல்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 29 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாதன் காரணமாக நீர்கொழும்பு தளுபத்த எரிபொருள் நிரப்பு நிலையம் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக நேற்று (28) பகல் 2 மணியில் இருந்து மக்கள் காத்திருந்தனர்.

எனினும், மண்ணெண்ணெய் தீர்ந்து விட்டதென உரிமையாளர் கூறியதன் காரணமாக ஆத்திரமடைந்து மக்கள், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

 நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பூச்சாடிகள் பல உடைக்கப்பட்டன.

 மின்சாரத்தடை  காரணமாக இரண்டு தடவைகள் மண்ணெண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டது. இரண்டாவது தடவை மின்சாரம் துண்டிக்கப்பட்டு  மீண்டும் மின்சாரம் வழமைக்குத் திரும்பியதன் பின்னர், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் மண்ணெண்ணெய் தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.

 இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எரிபொருள் நிலையத்தின் அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் பலவற்றை உடைத்து நொறுக்கினர். 

அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார்   நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .