2025 மே 01, வியாழக்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை அலோபோமுல்ல மஹபெல்லான சந்தியில் ஐஸ் போதைப்பொருளுடன் பாதாள உலக உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபருடன் 6450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவர் மொரட்டுவ எகொட உயன பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாதாள உலக உறுப்பினரான 'அப்பா'வின் சீடன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அன்றைய தினம், சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும், சந்தேகநபர் மொரட்டுவ எகொட உயன பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர்  என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .