2025 நவம்பர் 19, புதன்கிழமை

ஒவிட்டியாவத்தை குப்பை மேட்டில் தீ

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவு குப்பைகளை அகற்றும் கொச்சிக்கடை ஒவிட்டியாவத்தைப் பிரதேசத்திலுள்ள பாரிய குப்பை மேடு, நேற்று (24) இரவு 8.30 மணியளவில் திடீரென தீபற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து, மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

குப்பைக் கூலங்களின் மேற்பரப்பில் பரவிய தீயை அணைக்க முடிந்தபோதும், மண்படைக்குக் கீழ்  உள்ள தீயை,  இன்று   (25) முற்பகல் 11 மணிவரை  அணைக்க முடியவில்லை. இதன்காரணமாக தொடர்ந்து புகை மூட்டம் வெளிவந்து கொண்டிருந்தது.

இது தொடர்பாக பிரதேசவாசிகள் தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடைப் பிரதேசங்களிலிருந்து குப்பைகள் இங்கு கொண்டுவரப்பட்டு கொட்டப்படுகின்றன. தினசரி இங்கு 35 இற்கும் 40 இற்கும் இடைப்பட்ட குப்பை லொறிகள் குப்பைகளைக் கொட்டுவதற்கு வருகின்றன.

தனியாருக்குச் சொந்தமான காணியிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன. பிரதேசவாசகள் ஒன்றிணைந்து இங்கு குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளேம். அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது” என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X