2025 மே 05, திங்கட்கிழமை

ஓய்வுபெற்ற படையினருக்கு சேவை ஓய்வூதியம் வழங்கிவைப்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னிரெண்டு ஆண்டுகளுக்குக் குறைந்த சேவைக்காலத்தை நிறைவு செய்த மாற்றுத்திறனாளிகளான ஓய்வுபெற்ற படையினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சேவை ஓய்வூதியம் வழங்கிவைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், அடையாளமாக 150 பேருக்கான சேவை ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

முப்படையைச் சேர்ந்த 2,261 பேர் மற்றும் 136 பொலிஸாருக்கும் இந்த சேவை ஒய்வூதியம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக, விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, அமைச்சரவை அங்கிகாரத்தினைப் பெற்று, சேவை ஓய்வூதியத்தை வரலாற்றில் முதற்தடவையாக படையினருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X