2025 மே 01, வியாழக்கிழமை

ஓரின சேர்க்கையாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Editorial   / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிசர - மஹாபாகே பகுதியைச் சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் (லெஸ்பியன்) ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வத்தளை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

 ஓரினச்சேர்க்கை மனதின் நோயோ அல்லது குற்றமோ அல்ல என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

22 வயதான ஓரின சேர்க்கையாளரான பெண்ணுக்கு எதிராக வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வெலிசர மஹாபாகே பொலிஸாரின் உதவியுடன் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

அவர் லெஸ்பியன் என்பதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் வயது வந்த பெண்ணை சட்டவிரோதமாக அடைத்துவைத்து, துஷ்பிரயோகம், துன்புறுத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற சேவைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .