Editorial / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு - குரணை பிரதேசத்தில், ஆடம்பர வீடொன்றை நேற்று (28) மாலை சுற்றிவளைத்த நீர்கொழும்பு பொலிஸார், அங்கு கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், அங்கிருந்து கசிப்பு மற்றும் கோடா அடங்கிய பரல்களைக் கைப்பற்றியுள்ளனர்.
கொந்தகேமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் குரணை, ரஜ மாவத்தையில், ஆடம்பர வீடொன்றை வாடகைக்கு எடுத்து, மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். வீட்டு உரிமையாளர், வெளிநாடொன்றில் பணியாற்றி வரும் நிலையில், அவரது தந்தை வீட்டை சந்தேக நபருக்கு வாடகைக்கு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், குறித்த இளைஞன் வீட்டின் அறையொன்றில் இரகசியமான முறையில் கசிப்பு தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பில், நீர்கொழும்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து, மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதுடன், நான்கு கோடா பரல்கள், 20 கசிப்பு போத்தல்கள் என்பவற்றையும் கசிப்பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago