Editorial / 2022 ஜூன் 16 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். இசட் ஷாஜஹான்
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு செல்லும் வீதியோரத்தில் கிடந்த கைக்குண்டு, இன்று (16) பகல் மீட்டுள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
எந்த நோக்கத்திற்காக இங்கு இந்த கைகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவு, நீதிமன்ற உத்தரவின்படி அந்த குண்டை செயலிழக்கச் செய்தது.
பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பிராந்திய குற்ற புலனாய்வு பிரிவினர் ஆகியோர் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



2 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Dec 2025