2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கணனிக் கூடத் தொகுதி திறப்பு விழா

Princiya Dixci   / 2016 மே 24 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
 
நீர்கொழும்பு, விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் புதிததாக அமைக்கப்பட்ட கணனிக் கூடத் தொகுதி, நாளை புதன்கிழமை (25) காலை 8.30க்கு  சட்டம் ஒழுங்கு மற்றும் தென்பகுதி அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கல்லூரியின் காப்பாளர் திருமதி யோகேஸ்வரி விஜயரத்தினம் பிரதம விருந்தினராகவும் நீர்கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.ஏ.சி. பெர்ணாந்து, கல்லூரி அதிபர் புவனேஸ்வரராஜா, தொழிலதிபர் பி. பரத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் மன்றத்தினால் கணனிக் கூடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X