2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கரு ஜயசூரிய தலைமையிலான பௌத்த பிக்குகள் குழு பாகிஸ்தான் பயணமானது

Gavitha   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையின் கீழ்;, இலங்கையின் உயர்மட்ட பௌத்த பிக்குகள் மற்றும் புலமையாளர்களைக் கொண்ட 40 பேரடங்கிய குழுவானது, ஏப்ரல் 18 லிருந்து 25 வரை சுற்றுலாவினை மேற்கொள்ள பாகிஸ்தான் நோக்கி, திங்கட்கிழமை(18) பயணமானது.

இவ்விஜயமானது, தக்ஷிலாவில் அமைந்துள்ள பௌத்த தலமான காந்தாரா பாரம்பரியத்தினையும் அதன் தலைநகரம் மற்றும்  கலாசார மையங்களை, இலங்கை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதனை இலக்காகக் கொண்டுள்ளது.

இக்குழுவுடன் நீதி மற்றும் புத்தசாசன அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, இஸ்லாமாபாத் நகரில் வைத்து இணைந்து கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 காந்தாரா புண்ணிய பௌத்த தலமானது,  பட்டுப்பாதையின் பகுதியாகக் காணப்படுவதுடன், இத்தலங்களைப் பார்வையிடுவதற்காகப் பல பௌத்த துறவிகள் இவ்வரலாற்றுப் பாதையூடாக வருகை தருகின்றனர்.

இக்குழுவானது மிக முக்கிய ஆன்மீக மற்றும் பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த மர்தான், டக்தி-இ-பாஹி, ஸ்வாட் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், லாஹுர் த்ஷிலா மற்றும் பெஷாவார் அருங்காட்சியகம் போன்ற முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விஜயத்தின் போது, பாகிஸ்தானிய தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர், சமய அலுவல்கள் அமைச்சர், வெளிநாட்டு அலுவல்களுக்கான பிரதமரின் விஷேட பிரதிநிதி மற்றும் பஞ்சாப், சிந்த் ஆளுனர் போன்றோரை இக்குழு சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய நினைவுச் சின்னங்கள், லோக் விர்ஸா அருங்காட்சியகம், கேஹேவரா சுரங்க பாதை, காயிதே-இ- ஆசம்  கல்லறை, இக்பால் கல்லறை, பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் பஞ்சாப் தகவல் தொழில்நுட்பவாரியம் போன்றவற்றுக்கும் இக்குழு விஜயம் செய்யவுள்ளது.

பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாகக் காணப்பட்டாலும் உலகத்தின் மிகப் பெரிய பௌத்த பாரம்பரியமான காந்தார மற்றும் கலைபொருட்களை நாட்டின் வடமேற்கு பகுதியில் பாதுகாத்து வருகின்றமை சிறப்பம்சமாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X