Editorial / 2017 ஜூலை 13 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல் குவாரியொன்றில் கருங்கல் ஏற்ற வந்த டிபர் வாகனத்தின் மீது பாரிய கல்லொன்று சரிந்து வீழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கம்பஹா மாவட்டம், மீரிகம, தம்பகொல்ல பிரதேசத்தில் நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த டிபர் வாகனத்தின் மீது கல்லுடன் கூடிய மண்மேடு சரிந்துள்ள போது, டிபர் வாகனத்தில் மூவர் இருந்துள்ளனர். இதன்போது, படுகாயமடைந்த மூவரும், மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வரகாபொலை, மாஹேன பிரதேசத்தை சேர்ந்த டிபர் வாகனத்தின் 19 வயதுடைய சாரதியே இதன்போது உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய இருவரும், மேலதிக சிகிச்சைக்காக வத்துபிடிவல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
28 minute ago
35 minute ago
44 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
44 minute ago
45 minute ago