2025 நவம்பர் 19, புதன்கிழமை

கல்வியைத் தொடர உதவுமாறு கோரிக்கை

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன்   ஹரன்   

கல்வியைத் தொடர உதவுமாறு, ஐக்கிய நாடுகளின் அமைப்பின் சிறுவர் நிதியத்திடம் (யுனிசெப்) கோரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில், வறுமை மற்றும் போர்ச்சூழல் காரணமாக, பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  யுனிசெப் பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தார்

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப்பின் தெற்காசிய பிராந்தியத்தியத்துக்கான பணிப்பாளர் ஜீன் கப் உட்பட  அவரது பிரதிநிதிகளுடனான சந்திப்பு, கொழும்பில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே அவர்  மேற்படி விடயத்தை, ஐ.நா பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.  

குறித்த சிறுவர்களுக்கு கல்வி  வழங்குவதற்கான  திட்டங்களை வகுப்பதற்கு,  யுனிசெப் நிதியுதவி வழங்க வேண்டுமென, அவர் இதன்போது கோரினார்.

வறுமைக் காரணமாக பாடசாலையிலிருந்து  இடைவிலகும்  சிறுவர்கள்,  வழிதவறிச் சென்று போதைபொருள் பாவனை போன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகக் கூடிய சந்தரப்பம் உள்ளதெனவும் அவர்களுக்கு, கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக, சிறந்த பிரஜைகளை  உருவாக்க முடியுமெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X