Editorial / 2020 பெப்ரவரி 14 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என். ஜெயரட்னம்
களுத்துறை நகரசபை எல்லைக்குள், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் குடிநீரில், உப்பு கலந்துக் காணப்படுவதன் காரணமாக, மாதாந்தக் குடிநீர் கட்டணத்தை வசூலிக்காதிருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில், களுத்துறை நகரசபையின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஏகமனதாகக் கேட்டுக்கொண்டதை அடுத்து, களுத்துறை நகரசபை தலைவர் அல்ஹாஜ் மொஹமட் அமீர் நசீர், இவ்விடயம் தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவருவதாக சபையில் தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தின் வாதுவையில் இருந்து பெந்தரை வரையிலான பகுதிகளுக்கு, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், களுகங்கையில் இருந்து பெறப்பட்டு கெத்தஹேன நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படும் குடிநீரிலேயே, உப்பு கலந்துள்ளது.
குறித்த சுத்திகரிப்பு நிலையத்தில், பல வருடகாலமாக எவ்விதமான நிரந்தர நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையிலேயே, வரட்சிக் காலங்களில் உப்புநீர் கலப்பதாகவும் இதனால், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையோ களுத்துறை பிரதேச சபையோ, அல்லது அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளோ, இது விடயத்தில் நிரந்தரமான தீர்வோன்றைப் பெற்றுத்தர முன்வராத போதிலும், களுத்துறை நகரசபையினர், நீர்த் தாங்கிகள் மூலம் மக்களுக்கான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, 108 நீர்த் தாங்கிகள் மூலம், களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
22 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
2 hours ago