Editorial / 2017 ஜூன் 15 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தப் பாதிப்புகளை மீளாய்வு செய்து மேற்கொள்ள வேண்டிய உரிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கான விசேட மீளாய்வுக் கூட்டமொன்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், அமைச்சின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (14) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சீ.எம்.நபீல், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர, இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்கள உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago