2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

காதலியிடம் பறக்க முயன்ற இளம் பிக்குவுக்கு சிக்கல்

Editorial   / 2022 செப்டெம்பர் 18 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

சீதுவை நந்தாராம விஹாரையின் விஹாராதிபதி  நெதகமுவ மஹாநாம படு கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டிருந்த  சந்தேக நபரான இளம் பிக்குவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு நீர்கொழும்பு  மேலதிக நீதவான் மிலான் ஜயசூரிய நேற்று (17) சனிக்கிழமை   உத்தரவிட்டார். 

ஏக்கல சுகந்தசிறி (வயது 18) என்பவரே விளக்கமளிகளில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட சந்தேக நபராவார்.

 சீதுவை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டாரவின்  வழிகாட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

அவர், விஹா​ராதிபதியை கொலைச் செய்துவிட்டு, விஹாரையில் இருந்த பெறுமதியான இரண்டு வாகனங்களை விற்றுவிட்டு, டுபாயில் உள்ள தனது முஸ்லிம் காதலியிடம் செல்வதற்கு முயன்ற போதே, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விஹாராதிபதியை படுகொலைச் செய்வதற்காக முஸ்லிம் காதலியின் உறவினர்கள் சிலரின் ஒத்துழைப்பும்​ பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .