2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கிராம அலுவலரை அச்சுறுத்தியவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்னம்

அகலவத்தை- கித்துள்கொடை கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவுக்காக, கிராம அலுவலகரும்  தெரிவு குழுவும்  இணைந்து  தயாரித்த பெயர் பட்டியலில் குறைப்பாடு காணப்படுவதாக தெரிவித்து, கிராம அலுவலரை தகா வார்த்தைகள் கூறி அச்சுறுத்திய குற்றச்சாட்டில், அகலவத்தை பிரதேச சபையின் முன்னாள்  தலைவர் சமிந்த ரணவக்கவை பொலிஸார் நேற்று (07)கைதுசெய்துள்ளனர்.

கிராம அலுவலர் எல்.எஸ். சித்தும் சமீர அகலவத்தை பொலிஸ் நிலையத்தில்  செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சம்பவத்தையடுத்து, அனைத்து கிராம அலுவலகர்களும் தமது சேவையில் இருந்து தற்காலிகமாக  விலகி இருப்பது குறித்து தொழில் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக,  ஸ்ரீலங்கா ஐக்கிய கிராம அலுவலகர்களின் களுத்துறை மாவட்ட சங்க செயலாளர் ஜீ.எஸ்.எம் தர்மசேன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X