2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

’குப்பை அகற்றுவதற்கான தேசிய கொள்கை என்ன’

Editorial   / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் சேரும், குப்பைகளை அகற்றுவதற்கான தேசிய கொள்கை என்னவென்று, உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.

குப்பைகளை அகற்றும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான தேசிய கொள்கையை தயாரிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, உயர்நீதிமன்றத்தில் நேற்று (09) பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிட்ட ஜெனரல் இந்திகா தேமுனி டி சில்வா, குப்பைகளை அகற்றுவதற்கான தேசிய கொள்கை, அரசாங்கத்தினால் தற்போது தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது என்று, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X