Editorial / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். மடவல
மேல் மாகாணத்திலுள்ள பிரதான பஸ் நிலையங்களில் உள்ள கழிவறைகளில் தண்ணீர், மின்சார வசதிகள் உரிய வகையில் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக, மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார்.
களுத்துறை, புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“மேல் மாகாணத்தில், பொதுப் போக்குவரத்து பஸ்களில், சுமார் 40 இலட்சம் வரையிலான பயணிகள் பயணம் செய்கின்றனர். எனினும், அவர்களுக்கு உரிய உணவுகள் பெற்றுக்கொள்ள முடியாமை மற்றும் கழிப்பிட வசதிகள் காணப்படாமை குறித்து, பல்வேறு முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கப்பெற்றன.
“அதனடிப்படையில், நாம் சோதனைகளை மேற்கொண்டு, தேவையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.
“அது மாத்திரமல்லாது, மேல் மாகாணத்தில் இயங்கும் பஸ்களின் சாரதிகள், நடத்துநர்களின் முறையற்ற செயற்பாடுகள் குறித்தும், எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளன. அவை தொடர்பிலும் நாம் ஆராய்ந்து, குற்றமிழைப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
7 minute ago
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
42 minute ago
47 minute ago