Editorial / 2020 மார்ச் 06 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு சிசிச்சையளிக்கும் நிலையமாக, வத்தளை- ஹெந்தலயிலுள்ள தொழுநோய் வைத்தியசாலையை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வத்தளை-ஹெந்தல பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்குளிய-ஹெந்தல பிரதான வீதி, ஹேக்கித்த சந்தியை மறித்து, முன்னெடுத்துவரும் பாரிய ஆர்ப்பாட்டம் காரணமாக, அப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஹேக்கித்த- வத்தளை, ஹேக்கித்த- ஹெந்தல ஆகியப் பகுதிகளுக்கான போக்குவரத்தே முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைராஸ் தொற்று ஏற்பட்டுள்ள நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோரை, 14 நாள்கள் வைத்துப் பராமரிப்பதற்காக, மேற்படி தொழு நோய் வைத்தியசாலையை, கொரோனா சிகிச்சைக்கான மத்திய நிலையமாக மாற்றுவதற்கு, சுகாதார அமைச்சுத் தீர்மானித்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச மக்கள் மூன்று தினங்களாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாந்தீவிலுள்ள தொழுநோய் வைத்தியசாலையையும் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மாந்தீவு பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
14 minute ago
34 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 minute ago
34 minute ago
3 hours ago