Yuganthini / 2017 ஜூன் 20 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நகரில் இடத்துக்கிடம் குவிந்துள்ள குப்பைகளை இந்த வாரத்துக்குள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ஜனாதிபதியோ அல்லது வேறு எந்த தரப்பினரோ, எனக்கு மூன்று நாட்களுக்குள் குப்பைகளை அகற்றுமாறு, எந்தவொரு அறிவித்தலையும் விடுக்கவில்லை.
“யாருடைய அழுத்தத்துக்காகவும் இதனை நான் செய்யவில்லை. கொழும்பு நகரை சுத்தமாக வைத்திருப்பதுடன், தூய்மையான நகராக மாற்றுவதே எனது நோக்கமாகும்.
“நான் நேற்று, கொழும்பு நகரில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டேன். இதன்போது, குப்பை அகற்றும் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுவதுடன், இந்த குப்பைகளை டிரக்டர் வாகனங்களில்தான் எடுத்துச் செல்லப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. கொழும்பில் இவ்வாறு குப்பைகள் இடத்துக்கிடம் குவிந்து காணப்படுவதற்கான பிரதான காரணம், மக்கள் அதனை வகைப்படுத்தாமல் வீசிவிட்டுச் செல்வதாகும்.
“தற்பொழுது நிறைந்துள்ள குப்பைகள் அனைத்தும் அகற்றப்படும். வகைப்படுத்தாமல் குப்பை போடுபவர்களை கண்டறிந்து கைதுசெய்யுமாறு பொலிஸாருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
28 minute ago
33 minute ago
45 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
33 minute ago
45 minute ago
48 minute ago