Gavitha / 2017 மே 19 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
தனியாகச் செல்லும் பெண்களின் நகைகளை கொள்ளையடித்து வந்த மூன்று சந்தேகநபர்களை, நீர்கொழும்பு சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் பொலிஸ் பிரிவினர், கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விருவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளின் போது, கட்டானை, தங்கொட்டுவ, கொஸ்வத்த, மாரவில, வென்னப்புவ ஆகிய பகுதிகளில், சந்தேகநபர்கள் மேற்கொண்ட 7 கொள்ளைகள் பற்றித் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மற்றைய சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டார்.
மேலும், கொள்ளையிடப்பட்ட சில நகைகளும் மோட்டார் சைக்களில்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளர்.
கொச்சிக்கடை மற்றும் தங்கொட்டுவ பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள், போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளமையும் கொள்ளையிட்ட நகைகளை, கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள நகை விற்பனை நிலையங்களில் அடகு வைத்தும், விற்பனை செய்துள்ளமையும், விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைக்காக, சந்தேக நபரகள் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
33 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago