Princiya Dixci / 2017 மே 10 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தமிழ்ச் சங்கம் நடத்தும் தொடர் சொற்பொழிவு நிகழ்வு, நாளை 12ஆம், 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக, சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி தெரிவித்தார்.
இத் தொடர் சொற்பொழிவை வவுனியா கலை, இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர், தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தவுள்ளார்.
முதல் நாள் நிகழ்வு, நாளை வெள்ளிக்கிழமை மாலை 5.30க்கு, இலக்கியச் செம்மல் செ.குணரத்திணம் அரங்கில், கொழும்பு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெறும்.
தமிழ் வாழ்த்தை செல்வி சௌதாமினி மோகனசுந்தரம் இசைப்பார். தொடக்கவுரையை, கொழும்புத் தமிழ்ச்சங்க இலக்கியக்குழுச் செயலாளர் ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் நிகழ்த்துவார். “சிலப்பதிகாரச் சிந்தனைகள்” எனும் தலைப்பில் “தமிழ்மணி” அகளங்கன் ,சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார்.
இந் நிகழ்வின் இரண்டாம் நாள், சனிக்கிழமை மாலை 5.30க்கு, தமிழவேள் க.இ.க.கந்தசாமி அரங்கில் கொழும்பு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் வைத்தியகலாநிதி சி.அனுஷ்யந்தன் தலைமையில் நடைபெறும்.
தமிழ் வாழ்த்தை திருமதி ஹம்சானந்தி தர்மபாலன் இசைப்பார். “கம்பனும் வான்மீகியும்” எனும் தலைப்பில், “ தமிழ்மணி” அகளங்கன் சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார்.
இந் நிகழ்வின் நிறைவு நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30க்கு முத்தையா கதிர்காமநாதன் அரங்கில் கொழும்பு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் த.அரியரத்தினம் தலைமையில் நடைபெறும்.
தமிழ் வாழ்த்தை செல்வி சிந்தூரி, செல்வி சரவணசுந்தரி இசைப்பார்கள். நன்றியுரையை, கொழும்பு தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நிகழ்த்துவார். “ புறநாநூற்றுச் செய்திகள்” எனும் தலைப்பில், “ தமிழ்மணி” அகளங்கன், சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார்.
57 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago