Niroshini / 2016 ஜூன் 02 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தத்தின் பின் பாதையோரங்களில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் விசேட வேலைத் திட்டம், நேற்று காலை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் மத்திய நிலையம் அங்கொடை ரி.பி.இலங்கரத்தன மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இராணுவம், பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு என்பவற்றைச் சேர்ந்த சுமார் 500 பேர் இப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட டிப்பர், டிரக்டர், குப்பை சேகரிக்கும் இயந்திரம், மின்சாரத் தடைகள் ஏற்படுவதைச் சீர்செய்யும் வகையிலான நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பணிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, குப்பை அகற்றும் மத்திய நிலையம் செயற்படும் அங்கொடை ரி.பி.இலங்கரத்ன மைதானத்துக்கு நேற்று விஜயம் செய்து, குப்பைகள் அகற்றும் பணிகளை ஆரம்பித்துள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இரண்டு தினங்களில் கொழும்பு மாவட்டத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென இதன்போது அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
12 minute ago
26 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
26 minute ago